பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்!

LIVE

பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்!

காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருக்கும் பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்க தொடங்கி இருக்கிறது. பைபர்ஜாய் புயல் கரையை முழுவதுமாக கடக்க சுமார் 6 மணி நேரம் ஆகும் என என கூறப்படுகிறது.

Newest First Oldest First
10:03 PM, 15 Jun

பைர்ஜாய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், பலத்த காற்று வீசுகிறது. இன்று பகலில் வீசிய பலத்த காற்றால் குஜராத் மாநிலம் துவாரகாவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

9:55 PM, 15 Jun

பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

9:42 PM, 15 Jun

மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல். புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

9:09 PM, 15 Jun

நள்ளிரவு புயல் கரையை கடப்பதால் குஜராத் கடலோர பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

9:08 PM, 15 Jun

தற்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

9:06 PM, 15 Jun

70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

9:05 PM, 15 Jun

70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.