Hero maxi scooter – ஹீரோ மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து பிரீமியம் ரக மாடல்களை களம் இறக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் மேக்சி ஸ்டைல் ஸ்கூட்டர் ஒன்றை காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது.

மேக்சி ஸ்டைல் மாடல் ஆனது மிகவும் நேர்த்தியான ஸ்போட்டிவ் டிசைன் பெற்று உயர்தரமான பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட உள்ள மாடலாகும் மேலும் இதனுடைய எஞ்சின் பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது கிடைக்கவில்லை.

Hero Maxi Scooter

அனேகமாக அது 125சிசி அல்லது 150சிசி என்ஜினை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக யமஹா ஏரோக்ஸ் 155cc மாடலை எதிர்கொள்ளும் வகையிலான மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்ஸி ஸ்டைல் மாடல் ஹெட்லைட் செட்-அப், மேக்ஸி ஸ்கூட்டர் மிகவும் ஸ்போர்ட்டிவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்டெப்ட் இருக்கை மிகவும் கூர்மையாக ரேக் செய்யப்பட்டுள்ளது. இதில் 14 அங்குல சக்கரங்களாக இருக்கலாம்.

முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் சஸ்பென்ஷன் உள்ளது. இந்த டிசைன் ஸ்கெட்ச்சில், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் இருக்கலாம்.

இந்த ஸ்கூட்டர் அறிமுகம் குறித்தான எந்த ஒரு தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை முதன்முறையாக தற்பொழுது தான் காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.