
மாமன்னன் படத்தின் டிரைலர் அப்டேட் இதோ
நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு தனது கடைசி படமாக மாமன்னன் படத்தை அறிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இதில் லால், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவித்துள்ளனர். மாமன்னன் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். டிரைலர் உடன் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.