சென்னை: அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், போக்குவரத்து துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் சிவசங்கர் நேற்று தாக்கல் செய்தார். அந்த துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது: தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் 2021-22-ம் ஆண்டில் அரசு பஸ்களில் நாளொன்றுக்கு 1.21 கோடி பேர் பயணம் செய்தனர். 2022-23-ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்து உள்ளது. தினமும் […]
