சென்னை: நடிகர் மிர்ச்சி செந்தில் அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் மற்றும் ஸ்ரீஜா நடிப்பில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மிகவும் பிரபலம்.
இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது சீசனும் வெளியாகி ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பை பெற்றது.
முதல் சீசனில் இணைந்து நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ரியல் லைஃப்பிலும் ஜோடியாக இணைந்தனர்.
சீரியலை பார்த்து ஏமாந்துவிட்டதாக மிர்ச்சி செந்தில் பேட்டி: நடிகர் மிர்ச்சி செந்தில் சின்னத்திரையில் மிகவும் பிரபலம். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் லீட் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை இவர் கவர்ந்தார். இந்த தொடருக்கு தற்போதும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த சரவணன் மீனாட்சி தொடரில் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீஜா. இந்த ஜோடியும் தொடரை போலவே ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்.
இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தொடரின் இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. முதல் சீசனில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜாவிற்கு அதிகமான வரவேற்பு கிடைத்த நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து ரியல் லைஃப்பிலும் இணைந்தனர். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டனர்.
இதையடுத்து ஸ்ரீஜா கர்ப்பமானதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார் செந்தில். இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், சீரியலைப் பார்த்து ஏமாந்து தான் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். சரவணன் மீனாட்சி தொடரில், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜா, மிகவும் அடக்கமானவராக நடித்திருந்தார். மாமியாருக்கும் அடங்கிய பெண்ணாக நடித்தார். இதையடுத்து அவர் ரியல் லைஃப்பிலும் அப்படித்தான் என்று தான் நம்பியதாக செந்தில் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் அவரது கேரக்டர் வேறு மாதிரி என்றும் அவர் கூறியுள்ளார். வீட்டில் ஸ்ரீஜா ரொம்ப ஸ்ட்ரிக்டாம். அவருக்கு என்ன பிடிக்குமோ அதுமட்டும்தான் தங்களது வீட்டில் நடக்கும் என்றும் அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். மேலும் சீரியலில் உடன் நடிக்கும் நடிகைகளின் உண்மையான குணம் தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் நடிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் சீசன் 2 என அடுத்தடுத்த தொடர்களில் நடித்தவர் செந்தில். இந்தத் தொடரை தொடர்ந்து அடுத்த சீரியலில் கமிட்டாகாமல் இருந்த செந்தில், தற்போது ஜீ தமிழில் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக நித்யாவும் தங்கையாக ரித்திகாவும் இணைந்துள்ளனர். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.