குஷிநகர்: உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம், உர்தா என்ற கிராமத்தில் சங்கீதா என்ற பெண், தனது 5 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் இவர்கள் வீடு தீப்பற்றியதில் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் 6 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அப்பெண்ணின் கணவர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீடு தீப்பற்றியுள்ளது.