சென்னை தமிழக ஆளுநர் முதல்வருடைய அதிகாரத்தைப் பறிக்க முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாலும் அவர் வகித்து வரும் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பி உள்ளார். அதன்படி […]