பொம்மை (தமிழ்)
‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா ஒரு பொம்மையை தன் காதலியாக கற்பனை செய்து உளவியல் ரீதியாக பாதிப்படைகிறார். இதன் விளைவாக அவர் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள்தான் இதன் கதைக்களம். சைக்கலாஜிக்கல் திரில்லர் காதல் திரைப்படமான இது இன்று (ஜூன் 16ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
எறும்பு (தமிழ்)
கடன் பிரச்னைகளில் இருக்கும் சாதாரண குடும்பத்தில் துறுதுறுவென இருக்கும் சிறுவன் தங்க மோதிரத்தை தொலைத்துவிடுகிறான். இந்த விஷயம் தெரியாமல் ஊருக்குப் போயிருக்கும் அவரது பெற்றோர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்குள் அந்தச் சிறுவனும், அவனது அக்காவும் சேர்ந்து தங்க மோதிரத்தைக் கண்டுபிடிக்க முயல்வதுதான் இதன் கதைக்களம். சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, காமெடி கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள இது இன்று (ஜூன் 16ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.சுரேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயாடி (தமிழ்)
ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கி நடிக்க, அவருடன் வி.ரவிச்சந்திரன், மாளவிகா மனோஜ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரர், திரில்லர் திரைப்படமான இது இன்று (ஜூன் 16ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆதிபுருஷ் (இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம்)
ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். க்ரித்தி சனோன், தேவ்துத்தா நாகே, சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் ராமாயண கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். ஜனவரி மாதமே வெளியாகவிருந்த இத்திரைப்படத்தில் VFX காட்சிகளின் தரம் சரியாக இல்லை என்ற விமர்சனங்களால் தற்போது VFX மேம்படுத்தப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (ஜூன் 16ம் தேதி) இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
The Flash (ஆங்கிலம்)
சாஷா காலே, பென் அஃப்லெக், எஸ்ரா மில்லர் உள்ளிட்டோர் நடிப்பில் ஆண்டி முஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள DC மல்டியுனிவர்ஸ் திரைப்படம் ‘The Flash’. இத்திரைப்படம் நேற்று (ஜூன் 15ம் தேதி) ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
அடை மழைக்காலம் (தமிழ்) – Amazon Prime Video
கார்த்திக் சாமலன் இயக்கத்தில் எவராணி, ஜெய்கிஷன், தியா லக்ஷனா இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘அடை மழைக்காலம்’. காதலின் அர்த்தத்தை உணரும் காதல் ஜோடிகளின் கதை இது. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
Siya (இந்தி) – Zee5
அதிகார வர்க்கத்தில் இருக்கும் கும்பல்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது இளம் பெண், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க துணிச்சலுடன் சட்டப்போராட்டம் நடத்துவதும், அதையொட்டி நடக்கும் சமூக சிக்கல்களும்தான் இதன் கதைக்களம். மனீஷ் முந்த்ரா இயக்கத்தில் ஸ்டீபன் அலெக்சாண்டர், ருத்ர பிரதாப் சிங் சவுத்ரி, தேவ் சவுகான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
I Love You (இந்தி) – Jio Cinema
நிகில் மகாஜன் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், பவயில் குலாட்டி, அக்ஷய் ஓபராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘I Love You’. ஐடி-யில் பணிபுரியும் 32வயது பெண்ணின் காதல் கதையான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
Extraction 2 (ஆங்கிலம்) – Netflix
தீவிராவாத கும்பலிடம் மாட்டிக்கொண்ட குடும்பத்தைக் காப்பற்ற கமெண்டோ குழுவில் இருக்கும் கதாநாயகன் போராடுவதே இதன் கதைக்களம். சாம் ஹர்கிரேவ் இயக்கத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கோல்ஷிஃப்டே ஃபராஹானி, ஆடம் பெஸ்ஸா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Extraction 2’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் இன்று(ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
Chevalier (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
1745 – 1799 காலத்தில் வாழ்ந்த பிரபல பிரஞ்ச் இசையமைப்பாளரான ஜோசப் போலோனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஸ்டீபன் வில்லியம்ஸ் இயக்கத்தில் கெல்வின் ஹாரிசன், சமரா வீவிங், லூசி பாய்ன்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
Kandahar (ஆங்கிலம்) – Amazon Prime Video
ரிக் ரோமன் வா இயக்கத்தில் ஜெரார்ட் பட்லர், நவித் நெகாபன், அலி ஃபசல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் ‘Kandahar’. சிஐஏ ஏஜெண்டான கதாநாயகன் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத கும்பலின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அங்கிருந்து தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 16ம் தேதி) வெளியாகிறது.
Shaitan (தெலுங்கு) – Disney Plus Hotstar
ஜாஃபர் சாதிக், மணிகண்டன், கே.லீனா உள்ளிட்டோர் நடிப்பில் மஹி வி.ராகவ் இயக்கத்தில் வெளியாகும் தெலுங்கு வெப்சீரீஸ் ‘Shaitan’. க்ரைம் திரில்லர் வெப்சீரீஸான இது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் நேற்று (ஜூன் 15ம் தேதி) வெளியாகியுள்ளது.
Jee Karda (இந்தி) – Amazon Prime Video
சிறுவயது முதல் பழகி வரும் ஏழு நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் காதல், காமம், நட்பு, திருமணம் ஆகியவற்றில் தவறுகள் செய்து வாழ்க்கையை புரிந்து கொள்வதுதான் இந்த வெப்சீரீஸின் கதைக்களம். அப்பாஸ் தலால், ஹுசைன் தலால், அருணிமா ஷர்மா ஆகியோரது இயக்கத்தில் தமன்னா, சுஹைல் நய்யார், ஆஷிம் குலாட்டி உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகியுள்ள 18+ வெப்சீரீஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Rafuchakkar (இந்தி) – Jio Cinema
அர்ஜுன் சிங் பரன், கார்த்திக் நிஷாந்தர் ஆக்கத்தில் பவ்ஷீல் சாஹ்னி, சாஹத் விக், பிரியா பாபட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரீஸ் ‘Rafuchakkar’. ஆக்ஷன் திரில்லர் ஜானர் வெப்சீரீஸான இது கடந்த ஜூன் 15ம் தேதி முதல் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Full Monty (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
ராபர்ட் கார்லைல், மார்க் அடி, பால் பார்பர் உள்ளிட்டோர் நடிப்பில் பீட்டர் கட்டனேயோ இயக்கத்தில் உருவாகியிஉர்க்கும் ஆங்கில வெப்சீரீஸ் ‘The Full Monty’. காமெடி டிராமா திரைப்படமான இது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகியுள்ளது.
Black Mirror Season 6 (ஆங்கிலம்) – Netflix
சயின்ஸ் பிக்சன் வெப்சீரீஸான ‘Black Mirror’ 2011-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில் தற்போது இதன் ஆறாவது சீசன் நேற்று, (ஜூன் 15ம் தேதி) ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சார்லி ப்ரூக்கர் இயக்கிவரும் இதில் ஆரோன் பால், ஜோஷ் ஹார்ட்நெட், ஜாஸி பீட்ஸ், சல்மா ஹயக் பினால்ட் மற்றும் ரோரி கல்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Stan Lee (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
மார்வெல் காமிக்ஸின் பல சூப்பர்ஹீரோக்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த பிரபல அமெரிக்க காமிக் புத்தக எழுத்தாளரான ஸ்டேன் லீயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் ‘Stan Lee’. இது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் இன்று ஜூன் 16ம் தேதி வெளியாகிறது.
The Surrogacy (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக பணம் இல்லாமல் போராடுகிறார். அப்போது பணக்காரக் குடும்பம் ஒன்று வாடகைத் தாயைத் தேடிக்கொண்டிருக்க இவரும் தன் தந்தைக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்கிறார். ஆனால், குழந்தை மாற்றுத் திறனாளியாகப் பிறக்கிறது. அந்தப் பணக்கார குடும்பம் குழந்தையை ஏற்றுக் கொண்டதா, இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியும், வலிகளும் என்னென்ன என்பதே இதன் கதைக்களம். ஒரு வாடகைத் தாயின் வலிநிறைந்த கதையான இது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த வெப்சீரீஸை அராசெலி குஜார்டோ உருவாக்கியிருக்கிறார். ஷானி லோசானோ, வனேசா ரெஸ்ட்ரெபோ, மார்செலா குய்ராடோ உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
தியேட்டர் டு ஓடிடி
தெய்வ மச்சான் (தமிழ்) – Amazon Prime Video
மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், வேல ராமமூர்த்தி, `ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `தெய்வ மச்சான்’. தன் கனவில் வரும் மரண அறிவிப்பு பலித்துவிடாமல் காப்பாற்றப் போராடும் கிராமத்து மச்சானின் கதை இது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழரசன் (தமிழ்) – Zee5
மருத்துவத்தை வியாபாரமாக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு எதிராகத் தனியொரு மனிதனாகத் தந்தை நடத்தும் யுத்தமே ‘தமிழரசன்.’ பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இராவண கோட்டம் (தமிழ்) – Amazon Prime Video
சாதிக் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் பேசும் படம் ‘இராவண கோட்டம்.’ விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கிராமத்து ஆக்ஷன் திரைப்படம் இது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Vamanan (மலையாளம்) – Manorama MAX
மலை பிரதேசத்தில் ஹோம்ஸ்டே மேனேஜராகப் பணிபுரிபவரும், அவரது குடும்பமும் சந்திக்கும் ஹாரர் சம்பவங்கள் இதன் கதைக்களம். ஏ.பி. பினில் இயக்கத்தில் இந்திரன்ஸ், பைஜு, தில்ஷானா தில்ஷாத் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்களில் வெளியாகியிருந்த மலையாளத் திரைப்படமான இது தற்போது ‘Manorama MAX’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.