அரபிக்கடலில் 10 நாள்.. வழக்கத்திற்கு மாறானது பைபர்ஜாய்.. எதை உணர்த்துகிறது? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன

அகமதாபாத்: அரபிக் கடலில் வேறு எந்த புயலும் இல்லாத அளவுக்கு நீண்ட நாட்கள் அதாவது 10 நாட்கள் பைபர்ஜாய் புயல் நிலை கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஐஐடி பாம்பே பேராசிரியர் ரகு முர்துக்தே கூறினார்.

அரபிக்கடலில் நடப்பு ஆண்டின் முதல் புயலாக உருவானது பைபர்ஜாய். தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக இந்த புயல் உருவானது. கடந்த 6, 7 ஆம் தேதி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு வங்கதேசம் பெயர் வைத்தது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11 ஆம் தேதி அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. 10 நாட்களுக்கும் மேலாக கடலில் மையம் கொண்டிருந்த பைபர்ஜாய் நேற்று மாலை 6.30 மணியளவில் கரையக் கடக்க தொடங்கியது.

குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இந்த புயல் கரரையைக் கடந்தது. வடகிழக்கே நகர்ந்து சென்ற பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா – கட்ச் கடற்பகுதியை ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் இரவு 10.30 முதல் 11.30 மணிக்குள் கடந்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

புயல் கரையை கடந்ததன் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். மிக தீவிர புயலாக கரையக் கடந்த பைபர்ஜாய் புயலின் கண் பகுதி கரையை நெருங்க நெருங்க மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

இதனால், மின் கம்பங்கள் மரங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. குஜராத்தின் கடற்பகுதியில் கனமழையும் பலத்த காற்றும் வீசியது. கடல் கொந்தளிப்பால் கரைப்பகுதிகளில் இருந்த வீடுகள் சேதம் ஏற்பட்டன. இப்படி குஜராத்தின் கடலோர பகுதிகளில் உக்கிர தாண்டவம் ஆடியபடி புயல் கரையைக் கடந்தது. புயலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, அரபிக் கடலில் வேறு எந்த புயலும் இல்லாத அளவுக்கு நீண்ட நாட்கள் பைபர்ஜாய் புயல் நிலை கொண்டுள்ளது. இதற்கு முன்பாக அரபிக்கடலில் கடந்த 2019 ஆம் ஆண்டு கியார் புயல் 9 நாள் 15 மணி நேரம் நிலை கொண்டு இருந்தது. இதுதான் அரபிக்கடலில் நீண்ட நாள் நிலை கொண்டு இருந்த புயலாக இருந்த நிலையில், தற்போது பைபர்ஜாய் புயல் அதை ஓவர்டேக் செய்துள்ளது.

இவ்வளவு நாள் அரபிக் கடலில் பைபர்ஜாய் நிலை கொண்டிருந்ததற்கான காரணம் என்ன ஐஐடி பாம்பே பேராசிரியர் ரகு முர்துக்தே கூறுகையில், ” அரபிக் கடலில் நிலவிய வெதுவெதுப்பான தட்ப வெப்ப நிலையே பைபர்ஜாய் நீண்ட நாள் கடலிலேயே நிலை கொண்டிருக்க உதவியது”என்றார். அதேபோல், பருவநிலை மாற்றம் குறிப்பாக கடலின் மேல் பகுதியில் வெப்பம் அதிகரிப்பது புயல் மெதுவாகவும் நீண்ட காலம் நிலை கொண்டிருப்பதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பதற்கு பைபர்ஜாய் தான் உதாரணம்” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.