Mani Ratnam: பயங்கர கோபத்தில் வந்த மணிரத்னத்தை அழ வைத்த ஏ.ஆர். ரஹ்மான்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஏ.ஆர். ரஹ்மான் மீது கடும் கோபத்தில் வந்த மணிரத்னம் அழுத சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது.

​ஏ.ஆர். ரஹ்மான்​மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே தன் அற்புதமான இசையால் ரசிகர்களை தன்னை பற்றியே பேச வைத்தார். தொடர்ந்து மணிரத்னத்தின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மணிரத்னத்தை ஏ.ஆர். ரஹ்மான் அழ வைத்தது தெரிய வந்துள்ளது.

​பாம்பே​Adipurush Review: ஆதிபுருஷ் நல்லா இல்லனு விமர்சித்தவரை அடித்த பிரபாஸ் ரசிகர்கள்: அதிர்ச்சி வீடியோமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் 1995ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் ரஹ்மானின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. பாம்பே தீம் மியூசிக்கிற்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்தது. பாம்பே படத்தில் வேலை செய்தபோது ஏ.ஆர். ரஹ்மான் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் மணிரத்னம்.

​மணிரத்னம்​பாம்பே படம் குறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியதாவது, பாம்பே படப்பிடிப்பு நடந்து வந்தது. ஹம்மா ஹம்மா பாடலை ஷூட் செய்ய வேண்டும். ஆனால் இசை வரவில்லை. மாலையில் வருமாறு கூறினார் ரஹ்மான். மறுநாள் பாடலை ஷூட் செய்யணும். மாலையில் சென்றபோது டியூன் கிடைக்கவில்லை என்றார் ரஹ்மான்.
​கோபம்​Vairamuthu: வைரமுத்துவை பாராட்டும் திமுக ஆதரவாளர்கள்: காரணம் அந்த வைரல் வீடியோடியூன் இல்லை என்றால் எங்களை ஏன் வரச் சொன்னீர்கள் என மணிரத்னம் ரஹ்மானிடம் கேட்டார். ஆனால் என்னிடம் வேறு ஒன்று இருக்கிறது என்று கூறி பாம்பே தீம் மியூசிக்கை இசைத்தார் ரஹ்மான். அதை கேட்டு எனக்கும், மணிரத்னத்திற்கும் கண்ணீர் வந்துவிட்டது.

​கண்ணீர்​தீம் மியூசிக்கை கேட்ட பிறகு மணிரத்னமோ, என்ன செய்திருக்கிறீர்கள் ரஹ்மான்?. உங்களை படத்தில் இருந்து நீக்கவிடலாம் என வந்தால் நீங்களோ இந்த பாடல் மூலம் என்னை அழ வைத்துவிட்டீர்கள் என்றார். உடனே ரஹ்மானோ, எனக்கு இப்போ டியூன் கிடைத்துவிட்டது என்று கூறினார். ஹம்மா ஹம்மாவுக்கு டியூன் போடச் சொன்னால் தீம் மியூசிக் போட்டார் ரஹ்மான் என்றார் ராஜீவ் மேனன்.

​இசை​டிவி சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணாதீங்க: சரவணன் மீனாட்சி செந்தில்முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் பற்றி மணிரத்னம் கூறியதாவது, காலை 5.30 மணி வரை இசையமைக்கும் வேலை நடக்கும். அந்த நேரத்தில் வரும் இசை அருமையாக இருக்கும். காலை 3 மணி, சத்தமே இருக்காது. தலையில் ஹெட்போனுடன் வேலை செய்வார் ரஹ்மான். அப்பொழுது அங்கு இருந்தால் நமக்கு எதுவும் கேட்காது. இறுதியில் தன் இருக்கையில் இருந்து எழுந்து, ஹெட்போனை நம்மிடம் கொடுத்துவிட்டு செல்வார் என்றார்.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னத்தின் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பொன்னியின் செல்வன் 2. அந்த படத்திற்கு இசையமைத்ததுடன் பாடவும் செய்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகின. மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி என்றாலே அது வெற்றிக் கூட்டணி ஆகும். அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கப் போகிறார் மணிரத்னம். அதற்கும் இசைப்புயல் தான் இசையமைப்பார் என நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.