சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் அந்த இடத்தில் டாட்டூ குத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரேமம் படம் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரனுக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்
நடிகை அனுபமா பரமேஸ்வரன்: தமிழில் கொடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரனுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் கணிசமாக குவிந்து வருகிறது. அதே போல மலையாளத்திலும் ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகின் இளம் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரனின் சுருட்டை சுருட்டை முடி அழகுக்கே பல ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
தாராள கவர்ச்சி: தெலுங்கு, மலையாளத்தில் படவாய்ப்பு வந்தாலும் தமிழில் படவாய்ப்பு சரிவர இல்லை. அப்படியே வந்தாலும், பிரபலமில்லாத நடிகர்கள் படங்களில் நடிக் தான் வாய்ப்புகள் வருகின்றன. இதனால், ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த அனுபமா பரமஸ்வரன் இப்போது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள தாராளமான கவர்ச்சிகாட்டி வருகிறார்.
முத்தக்காட்சி: கவர்ச்சி மட்டுமில்லை தெலுங்கு திரைப்படம் ஒன்றில் லிப் லாக் முத்தக்காட்சிக்கு லட்சத்தில் பணம் வாங்கிக் கொண்டு தாராளமாக முத்தம் கொடுத்து அசத்தி இருந்தார். இதனால், கவர்ச்சியாக நான் நடிக்க ரெடி என்பதை தயாரிப்பாளர்களுக்கு சொல்லும் விதமாக விதவிதமான கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
ரசிக்கும் பேன்ஸ்: இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாட்டூ குத்திய இடத்தில் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில், நெஞ்சுக்குழிக்கு நடுவே சின்ன டாட்டூ ஒன்றை போட்டு அந்த டாட்டூ தெரியும் படி போட்டோ அதை அப்லோடு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பேன்ஸ் உச்சு கொட்டி ரசித்து வர்ணித்து வருகின்றனர்.
கைவசம் உள்ள படம்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடைசியாக பட்டர்ஃபிளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் சைரன் என்ற தமிழ் படத்திலும், ஜே.எஸ்.கே, மரீச்சிகா என்ற மலையாளப்படத்திலும், தில்லு ஸ்கொயர், Eagle என்ற தெலுங்கு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.