நாளை மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி : ரசிகர்களுக்கு விஜய் திடீர் நிபந்தனை

அரசியலுக்கு வரும் ஆசையில் காய்நகர்த்தி வரும் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கினார். இது வெற்றகரமாக நடந்தது. திட்டமிடப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதன் அடுத்தகட்டமாக 10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் படைத்து சாதனை படைத்த மாணவர்களை நாளை (17ம் தேதி) விஜய் சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சுமார் 1400 மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறுகிறார்கள்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை அழைத்து வரும் தொகுதி நிர்வாகிகள் தவிர வேறு யாரும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாள அட்டைகள் ஏற்கெனவே தொகுதி நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.