சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் உதயநிதிஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்
மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் ஏற்கனவே தெரிவித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியலை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து உள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை: இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டரில் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நிற்க, அவருக்கு எதிரில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் போட்டுக்கொண்டு நின்றிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கலக்கலான போஸ்டர்: அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி அமர்ந்திருந்தார் இந்த போஸ்டரும் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. மாமன்னன் போஸ்டரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் உள்ளனர். இத்திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.
அட்டகாசமான டிரைலர்: மாமன்னன் பட டிரைலர் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானதை அடுத்து மாமன்னன் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. வடிவேலுவின் குரலில், நான் பாடிக்கொண்டு இருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை நான் என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் என்று அமைதியான குரலில் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் நடிகர் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இப்படத்தை திரையில் காண காத்திருக்கிறார்கள்.