ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்துவிட்டு, தனது இறுதிச் சடங்குக்கு டிக்டாக் பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்…
45 வயதான David Baerten என்ற அந்நபர், அண்மையில் உயிரிழந்ததாக அவரது மகள் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். உடனே , குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு ஒன்று கூடினர். அவர்கள் நடுவே திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அதில் இருந்து David Baerten கீழே இறங்கி வருவதைக் கண்ட குடும்பத்தினர் ஓடிச்சென்று அவரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவும், உறவுகள் ஒன்றிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இவ்வாறு செய்ததாக டேவிட் தெரிவித்தார்.