கடலூரில் திருமணமான பதினைந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கெங்கநாயக்கன்குப்பத்தை சேர்ந்த விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ரவீனா என்பவருக்கும் ஜூன் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு இருந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சீக்கிரம் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில், wi fi கேபிளை சரி செய்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பியில் விமல்ராஜின் கை உரசியதில், மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.