சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சற்று முன் வெளியாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்?
மாமன்னன்: கண்ணை நம்பாதே படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன் இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகி உள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்த படம் வரும் ஜூன் 29ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
உண்மையை கேட்கும் காது தேடுகிறேன்: சற்று முன் வெளியாகி உள்ள டிரைலரில் வடிவேலுவின் குரலில், நான் பாடிக்கொண்டு இருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை நான் வாழ் நாள் முழுவதும் பாடுவேன் என்கிறார். கடைசியாக உண்மையை கேட்கும் காதுகளை நான் தேடி கொண்டிருப்பேன் எனப் பேசுகிறார். இதையடுத்து, கையில் துப்பாக்கியுடன் அரசியல்வாதியாக வரும் பகத் பாசில் அக்ரோஷமாக சுடுகிறார்.
டிரெண்டாகும் டிரைலர்: இதையடுத்து, டிரைலரின் இறுதியில் வடிவேலும் உதயநிதியும் ஒரு வீட்டிற்குள் அமர்ந்து இருக்க , உதயநிதி கையில் கத்தியுடன் முகத்தில் ரத்தக்காயத்துடன் ஆக்ரோஷமாக அமர்ந்து இருக்கிறார். வீட்டின் கதவை சுற்றி வில்லன்கள், உடைத்து ஏய் மாமன்னா என்ற ஆவேசமான சத்தத்துடன் டிரைலர் முடிவடைகிறது. அழுத்தமான வசனங்களை கொண்டுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகிறது.
என்னமோ மிஸ்ஸிங்: ஆனால் மாரி செல்வராஜின் முந்தைய படங்களான பரியேறும் பெரும் படத்தில் வருவது போல நாய், கர்ணன் வரும் குதிரை, அதே காடு மேடு காட்சி என மாமன்னன் டிரைலர் மாரி செல்வராஜின் படத்தின் முந்தைய படத்தை நினைவு படுத்துகிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் டிரைலரில் என்னமோ மிஸ்ஸிங் என்று ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.