கேப்டவுன்: ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசவா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்து. ஓராண்டை தாண்டிய நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இ்ந்நிலையில் உக்ரைன் சென்றிருந்த தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரம்போசாவா கூறியது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை வாயிலாக மத்தியஸ்தம் செய்ய தயார். அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் எனறார்.முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக ஆப்ரிக்கா யூனியன் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாட்டு தலைவர்களின் பிரதிநிதிகள் ரஷ்யா சென்று அதிபர் புடினை சந்தித்து விவாதித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement