விமானத்தில் வாலிபருக்கு செக்ஸ் டார்ச்சர் : மலையாள நடிகர் விநாயகன் மீது பரபரப்பு புகார்
மலையாள சினிமாவில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் விநாயகன். தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வில்லன் போலவே நிஜ வாழ்க்கையிலும் வில்லத்தனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்துகிறவர். 2019ம் ஆண்டு ஒரு இளம் பெண் இவர் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்தர். இந்த வழக்கில் விநாயகனுக்கு முன்ஜாமீன் கிடைத்தது. வழக்கு நடந்து வருகிறது. “நான் இதுவரை 17 பெண்களுடன் செக்ஸ் வைத்திருக்கிறேன், என்னை விரும்பி வரும் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது என்ன தவறு” என்று கூறி பரபரப்பு கிளப்பினார்.
இந்த நிலையில் தற்போது ஒரு வாலிபர் அவர் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கேரளாவை சேர்ந்த ஜிபிஜேம்ஸ் என்பவர் பஞ்சாபில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த மே மாதம் 27ம் தேதி கோவாவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பயணித்தேன். எனது அருகில் நடிகர் விநாயகன் அமர்ந்து பயணித்தார். அப்போது அவர் என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், செக்ஸ் டார்ச்சரும் செய்தார். இதுகுறித்து நான் விமான கம்பெனி அதிகாரிகளிடம் புகார் அளிதேன். விமானத்தில் இருந்து இறங்கி விட்டால் நாங்கள் புகாரை ஏற்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன்பிறகு விமான போக்குவரத்து துறையில் புகார் அளித்தேன். அவர்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரிக்க விமான போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார். மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.