வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 கோடி நிதி வழங்க விரும்புவதாக பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன், இவர் மீது தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தது, அ.தி.மு.க, விற்கு இரட்டை இலை பெற்றுத்தர லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி, செலவுகளுக்கு ரூ. 10 கோடி நிவாரண தொகை வழங்கிட தாம் விரும்புவதாகவும். இத்தொகையை தாம் நியாயமாகவும், சட்டரீதியாகவும் சம்பாதித்தது அந்த கடித்தில் சுகேஷ் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement