பெய்ஜிங்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் துணை தலைவருமான பில்கேட்ஸ் , பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஜின்பிங் கூறியதாவது: இந்தாண்டு, பெய்ஜிங்கில் நான் சந்திக்கும் முதல் அமெரிக்க நண்பர் நீங்கள் தான். சீனா- அமெரிக்கா இடையிலான உறவு மக்கள் – மக்கள் இடையிலான உறவின் அடிப்படையில் அமைந்தது. அமெரிக்க மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இரு நாட்டு மக்களும் நட்புறவை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement