மீண்டும் கமல்ஹாசனுடன் இணையும் விஜய்சேதுபதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இதில் விஜய்சேதுபதி தங்கபல் அணிந்து நடித்த சந்தானம் கேரக்டர் பேசப்பட்டது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 233வது படமாகும். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை கமல் அலுவலகத்தில் தொடங்கி இருக்கிறார் வினோத்.
இந்த படத்திலும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாராம். அவரை மனதில் வைத்து வில்லன் கேரக்டரை வடிவமைக்குமாறு வினோத்தை கமல் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய்சேதுபதியிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி கால்ஷீட் தேதி மற்றும் சம்பளம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.