சாட்சி இல்லையே! கோத்ரா கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் 35 பேர் விடுதலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காந்திநகர்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கொலை உள்பட 4 முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த 35 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாட்சி மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனக்கூறிய நீதிமன்றம் கலவரம் திட்டமிட்டது இல்லை என கூறி அவர்களை விடுவித்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பயங்கரமான கலவரம் நடந்தது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம்தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயிலுக்கு தீவைக்கப்பட்டது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தான் அந்த மாநிலம் பற்றி எரிய தொடங்கியது. பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. கோத்ரா உள்பட குஜராத்தின் பல இடங்களில் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கோத்ரா கலவரம் தொடர்பான பல வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோல் நகரில் பிரச்சனை ஏற்பட்டது. இங்கும் பலர் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக 3 பேர் அடித்து கொல்லப்பபட்டு ஆதாரங்களை அழிக்கும் வகையில் உடல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு ஹலோல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஹர்ஷ் திரிவேதி அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் தான் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லை எனக்கூறிய நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 35 பேரையும் விடுதலை செய்து அறிவித்தது.

அதேவேளையில் கலவரம் தொடர்பான விவகாரத்தில் போலியான மதசார்பற்ற ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அந்த சமயத்தில் தவறான கருத்துகளை பரப்பியதாகவும் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி கவலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபடவில்லை என்றார். மேலும் சரியான சாட்சியின்றி எதிர்தரப்பை சேர்ந்த அப்பாவிகள் தண்டனை அனுபவிக்காமல் இருப்பதை தடுக்கும் கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது என்றார்.

வகுப்புவாத கலவர வழக்குகளில் காவல்துறை என்பது பொதுவாக இருசமூகத்தினர் மீதும் வழக்குகளை பதிவு செய்யும். இந்த விவகாரத்தில் யார் மீதான வழக்குப்பதிவு சரியானது என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். அமைதியை மட்டுமே விரும்பும் குஜராத் மக்கள் இந்த சம்பவத்தால் வேதனையை அடைந்தனர். அப்போதைய போலியான மதச்சார்பற்ற ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தான் இந்த வேதனையை கொடுத்தனர் எனக்கூறி வேதனைப்பட்டார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.