சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவருக்கு விரைந்து பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர். அதற்கான உடற்தகுதி பரிசோதனை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் கூறும்போது,‘ ‘மனைவி விருப்பப்படி, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சில நாட்களில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது’’ என்றார்.