சென்னை: நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர். இந்தத் தொடரில் உடன் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது சன் டிவியின் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆல்யா மானசா. இந்தத் தொடர் தற்போது சேனலின் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் ஆல்யா மானசா, அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ, ஃபன்னி வீடியோ மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் தான் நேரத்தை செலவழிக்கும் வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.
நடிகை ஆல்யாவின் புதிய ரீல்ஸ் வீடியோ: நடிகை ஆல்யா மானசா மாடலிங் மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. இந்தத் தொடர் அவருக்கு மிகச்சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. இந்தத் தொடரில் உடன் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஆல்யா. இவர்கள் திருமணம் பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம் என்பதால் எளிமையாகவே நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.
தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக விடுப்பில் சென்ற ஆல்யா மானசா, தொடர்ந்து மீண்டும் சீரியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக அவர் சன் டிவியின் இனியா தொடரில் லீட் கேரக்டரில் இணைந்தார். கடந்த 6 மாதங்களாக இந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சேனலில் டிஆர்பியில் அதிக புள்ளிகளை இந்தத் தொடர் பெற்று தற்போது முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஆல்யா. இவரது ரீல்ஸ் வீடியோக்கள், ஃபன்னி வீடியோக்கள் மற்றும் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கும் வீடியோக்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 4.3 மில்லியன் பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர்.
காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நடந்து வருவது போல ஒரு வீடியோவை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ஆல்யாவிற்கு காலில் அடிபட்டதாக நினைத்து பதறிய நிலையில், உடனடியாக டான்ஸ் ஆடத் துவங்குகிறார். இதையடுத்தே அவர் காலில் அடிபட்டதாக நடித்துள்ளார் என்பது தெரியவருகிறது. தொடர்ந்து ரசிகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
தற்போது இனியா தொடரில் தன்னுடைய கலகலப்பான நடிப்பால் மெரூகூட்டி வருகிறார் ஆல்யா மானசா. இந்தத் தொடர் டிஆர்பியில் சேனலில் முன்னணியில் உள்ளதற்கு இவரும் ஒரு காரணம். குழந்தை பிறப்பிற்கு பிறகு சற்றே குண்டடித்திருந்த ஆல்யா, தற்போது தன்னுடைய பிட்னசை சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். குழந்தைகள், கணவர், குடும்பம், சீரியல் மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.