சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் கலந்துக்கொண்டு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், கடந்த நான்கு மாதங்களாக யூடிப்பில் என்னை பற்றி தான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தெரியாத்தனமா கிளி வளர்த்துட்டேன். அது நம்மோட பேசும் கிளின்னு நினைத்தேன். அது என்ன கிளின்னு கூட எனக்கு தெரியாது. அந்த கிளியால் நான் பட்டபாடு பெரும்பாடு.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அடுத்து என் உடல் எடை குறைப்பு பற்றி பேசி ஆரம்பித்தனர். சினிமாவுக்காக நான் உடல் குறையை குறைத்தேன். அப்போது நான் மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். ஐஸ்ந்து மாதங்களாக படுத்த படுக்கையாக மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்கு காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்க வழக்கங்கள். இவர் ஏன் இந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார் என நினைப்பீர்கள். அதற்கு தகுதியான ஆள் நான் தான். எப்போது அறிவுரை சொல்லும் இடத்தில் நான் இருக்கிறேன்.
மேலும், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கே கூட சென்றிருக்கிறேன். கடந்த ஜனவரி மாதம் என்னால் அந்த பழக்கம் இல்லாமல் இருக்கவே முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் நிம்மதி இல்லை. இரவெல்லாம் எழுந்து பைத்தியம் பிடித்ததை போல் திரிய ஆரம்பித்தேன். அந்த நேரத்தின் நக்கீரன் கோபால் என்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இவுங்க படம்னா கதையே கேட்க தேவையில்லை.. பிரியா பவானி சங்கர் போட்ட லிஸ்ட்.!
என்னுடைய ரத்தத்தில் மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருந்ததும், கெட்ட பழக்கங்களால் என்னுடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டத்தையும் அறிந்தேன். என்னுடைய குடும்பம் தான் மருத்துவரின் ஆலோசனைப்படி என்னை இரவு, பகலாக பார்த்துக்கொண்டது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு மாணவர்கள் மத்தியில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருக்கமாக ரோபோ சங்கர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சின்னத்திரையை தொடர்ந்து தற்போது ரோபோ சங்கர் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Maamannan Trailer: ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா.. மாமன்னனாக மிரட்டும் வடிவேலு.!