பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் ரிலீசான இந்தப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘பாகுபலி’ படத்திற்கு பிறகு வெளியான பிரபாஸ் படங்கள் எதுவும் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ‘ஆதிபுருஷ்’ படம் ரிலீசாகியுள்ளது. ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகியுள்ளது. 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் வெளியான போதே பலவித நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது இந்தப்படம்.
மோசமான கிராபிக்ஸ் காட்சிகளால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது ‘ஆதிபுருஷ்’. இந்நிலையில் நல்ல படங்களை ஆயிரம் குறை சொல்லும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தற்போது ‘ஆதிபுருஷ்’ படத்தை தனது விமர்சனத்தில் பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார். அதில், ராமாயண கதையை தெருக்கூத்தாக, சீரியலாக, சினிமாவா பார்த்து இருப்போம்.
Leo First Single: சர்ச்சையில் ‘லியோ’ பட போஸ்டர்: விஜய்க்கு இது முதல் முறை கிடையாது.!
இப்படி வந்து நொந்த கதையை படமாக்கும் போது மத்த கதையெல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்கு எடுத்து இருக்கனும்ல. ஆனா எந்தவித சுவாரஸ்யமே இல்லாம படத்தை எடுத்து வைச்சு இருக்காங்க. ஸ்கிரீன் பிளே, டையலாக்ல அடிச்சு தூக்காம, பத்து தலை ராவணனை கீழே, மேலன்னு அஞ்சு அஞ்சு தலையை வைச்சு இருக்காங்க. டபுள் டக்கர் பஸ் மாதிரி. ராவணனை பைல்ஸ் ஆபரேஷன் பண்ண மாதிரி நடக்க வைச்சு இருக்காங்க.
அது மட்டும் இல்லை புள்ளிங்கோ கட்டிங் எல்லாம் பண்ணி வைச்சு இருக்காங்க. சிஜி வொர்க் எல்லாம் ரொம்ப மோசம். இப்படி ஒரு படம் எடுத்து ராமர் மார்கெட்டையே காலி பண்ணிட்டாங்க. ஏற்கனவே டீசர் வெளியானப்ப ஊரே சிரிச்சுச்சு. அதுக்கப்புறம் அனுமனுக்கு சீட் ஒதுக்கிறேன்னு இப்பவும் ஊரே சிரிச்சுட்டு இருக்கு. இந்த இரண்டு விளம்பரம் மட்டும் இல்லன்னா, இப்படி ஒரு படம் வந்ததே பலருக்கு தெரியாம போயிருக்கும் என சகட்டுமேனிக்கு ‘ஆதிபுருஷ்’ படத்தை பங்கம் பண்ணியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Robo Shankar: தற்கொலை முயற்சி.. சாவின் விளிம்பிற்கே சென்றேன்: நடிகர் ரோபோ சங்கர்.!