வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டப்ளின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டில் குடி வந்தால், இந்திய ரூபாய் மதிப்பு படி, 71 லட்சம் தருகிறோம் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு விட்டு, நாடு குடி போனால் காசு கிடைக்கிறது என்ற அறிவிப்பை கேட்டால், அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். அதேநேரத்தில் சிலருக்கு இந்த அறிவிப்பு உண்மையா என்ற எண்ணம் தோன்றும். ஆனால் எங்கள் நாட்டுக்கு வாங்க, பணம் தருகிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த நாடு என்று தெரிய வேண்டுமா?
அது தான், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து, தன் நாட்டில் வந்து குடியேற விருப்புவோருக்கு இந்திய ரூபாய் மதிப்பு படி, ரூ.71 லட்சம் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதாவது:
அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு அங்கமாக இந்த திட்டம் அமையும்.
இந்தக் கொள்கையின் நோக்கம், பல ஆண்டுகளாக கடல் கடந்த தீவுகளில் தொடர்ந்து வாழ வழிவகை செய்வதோடு மக்களும் செழித்தது வாழ்வதை உறுதி செய்வதாகும்.
மேலும் தீவுகளில் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல், செழுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை1 முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement