சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்த நடிகர் விஜய் மாற்றுத் திறனாளி மாணவர் அளித்த பரிசை பார்த்து எமோஷனலானார்.
234 தொகுதிநடிகர் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காரை ஓட்டி வந்த விஜய்
இந்த நிகழ்ச்சியில் 234 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோருடன் பங்கேற்றனர். மாணவ மாணவிகளை சந்திப்பதற்காக நடிகர் விஜய் சென்னை ஈசிஆரில் உள்ள பனையூர் பங்களாவில் இருந்து காரில் புறப்பட்டார். விஜய், ஓட்டுநர் இல்லாமல் தானே தனது காரை ஒட்டி வந்தார்.
மாற்றுத்திறனாளி மாணவரின் பரிசுபின்னர் அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் தானும் ஒரு மாணவராக அமர்ந்திருந்தார் நடிகர் விஜய். மாணவிகளுடன் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் பேசி நலம் விசாரித்தார் நடிகர் விஜய். அப்போது இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் நடிகர் விஜயக்கு பரிசு ஒன்றை கொடுத்தார்.
எமோஷனலான விஜய்
அவரது அருகிலேயே அமர்ந்து அவர் கொடுத்த பரிசை அந்த மாணவரின் கண் எதிரிலேயே பிரித்து பார்த்து நெகிழ்ந்து போன விஜய், அந்த மாற்றுத்திறனாளி மாணவரை கட்டி அணைத்து நன்றி கூறினார். அப்போது எமோஷனலான விஜய் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டதை பார்க்க முடிந்தது.
நந்தினிக்கு வைர நெக்லஸ்தொடர்ந்து 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக கொடுத்தார். பின்னர் அந்த வைர நெக்லஸை நந்தினியின் கழுத்தில் போட்டுவிடுமாறு அவரது அம்மாவிடம் கூறினார் விஜய். நந்தினியின் கழுத்தில் வைர நெக்லஸ் ஜொளிப்பதை பார்த்து மகிழ்ந்த விஜய் அவருக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கினார்.
மாணவியுடன் தரையில்…இதேபோல் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் மேடைக்கு வர முடியாமல் தவித்த நிலையில் மேடையில் இருந்து கீழே இறங்கி நேராக அவர் இருந்த இடத்திற்கே சென்றார் நடிகர் விஜய். பின்னர் அந்த மாணவிக்கு சமமாக இருக்க தரையில் அமர்ந்த விஜய் அவருக்கும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.கொண்டாடப்படும் விஜய்
நடிகர் விஜய் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தது, மாணவ மாணவிகளிடம் நடந்து கொண்டது, மேடையில் பேசியது என எல்லாமே இதுவரை பார்க்காத ஒரு விஜய்யாக இருந்தது. விஜய்யின் இந்த முகத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி பொது ஜன மக்களும் பிரமித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் நடிகர் விஜய் கொண்டாடப்பட்டு வருகிறார்.
கிஃப்ட்