சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜயை மனதார பாராட்டி உள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார் தளபதி விஜய்.
இதையடுத்து, தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
விஜய் பேச்சு: சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், எத்தனையோ ஆடியோ லான்ச்சில் பேசி இருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பேசுவது இது தான் முதல் முறை என்றார்.
காசு வாங்கி கொண்டு ஓட்டு போடாதீங்க: மேலும்,நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்து புதிதாக நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்ம விரலை வைத்து நம்ப கண்ணையே குத்தி கொள்வது என்கிற என்ற ஒரு விஷயத்தை கேள்வி பட்டு இருக்கீங்களா? அதை தான் இப்போ நாம செஞ்சுக்கிட்டு இருக்கோம்.காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறோம். ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன் அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் என்றார்.
வைர நெக்லஸ் பரிசு: மேலும் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் வைர நெக்லசை பரிசாக கொடுத்து அவர்களின் பெற்றோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சால்வை போர்த்தி சான்றிதழ் வழங்கி அவர்களுடன் நிதானமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
புகழ்ந்த தாடி பாலாஜி: இந்நிலையில், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் விஜய்யின் இந்த செயலை புகழ்ந்துள்ளார். அதில் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் பரிசு வழங்கி இருக்கிறார். இதற்கு பெரிய மனது வேணும்.. ஒருத்தரை பாராட்டுவதற்கு பெரிய மனசு வேணும். அவர்களுக்கு செய்வதற்கு இன்னும் மிகப்பெரிய மனசு வேணும்.
பெரிய மனசு வேணும்: அந்த மனசு விஜய்யிடம் இருக்கிறது. அந்த வகையில் தளபதி விஜய்க்கு எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் நீங்க நிறைய செய்யணும்.. நீங்கள் இன்னும் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். தாடி பாலாஜியைப் போல மற்ற நடிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.