வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் இந்திய கொடி(மூவர்ண கொடி) உயர பறக்க விடப்பட்டு உள்ளது.
வரவேற்பு
இந்தியாவில் இருந்து வரும் 20ம் தேதி புறப்படும் பிரதமர் மோடி, 21ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு, 22ம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
விருந்து:
இதனையடுத்து, அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு தரப்பு உறவு தொடர்பாக கலந்துரையாடுகிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக அன்றைய தினம் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்க உள்ளனர். இதையடுத்து அமெரிக்க பார்லி மென்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
உயர பறக்கும் இந்திய கொடி
பிரதமர் வருகையை முன்னிட்டு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியாவின் மூவர்ண கொடி உயர் பறக்க விடப்பட்டு உள்ளது. இது குறித்த அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கூறுகையில், இங்கு மூவர்ண கொடி உயரப் பறப்பதை பார்ப்பது உண்மையில் கவுரவம், பெருமையாக உள்ளது என்றனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், வெள்ளை மாளிகையின் இந்திய சமூக மக்கள் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்ள கூடிய கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடியை வரவேற்க அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement