உருவக்கேலி செய்பவர்களுக்கு ரேஷ்மா பசுபுலேட்டி பதிலடி

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் குடும்ப குத்துவிளக்காகவும், இன்ஸ்டாகிராமில் அல்ட்ரா மாடர்னாகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், ரேஷ்மாவின் கவர்ச்சியான படங்களுக்கு கமெண்ட் பதிவிடும் சிலர் அவர் உடல் அங்கங்களை சுட்டிக்காட்டி ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதைபார்த்து கடுப்பான ரேஷ்மா, 'சிலருக்கு உருவகேலி செய்வது சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், அதை கேட்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவே மாட்டீர்களா?. சிலர் என்னிடம் ஆப்ரேஷன் செய்து உதட்டையும், மார்பகத்தையும் பெரிதாக்கினீர்களா என்று கேட்கிறார்கள். சரி அப்படி செய்தால் தான் என்ன? அது என் தனிப்பட்ட விருப்பம். இப்போதெல்லாம் நடிகைகள் நாங்கள் சர்ஜரி செய்வதை விட பொதுமக்கள் தான் அதிகமாக அழகுக்காக சர்ஜரி செய்து கொள்கின்றனர். மேலும், நான் வெயிட் போட்டதற்கு காரணம் விடாமல் ஷூட்டிங் செல்வதும், தூக்கமின்மையும் தான். எனக்கு பிடித்த மாதிரி நான் இருக்கிறேன். இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? ' என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.