வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த உள்ளதாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் கனடா மற்றும் அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர். 20 ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய தூதருக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. வன்முறையை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி இருந்தது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தேசவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தற்போது, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement