பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார். இது குறித்து அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார். வரும் 23 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் […]