வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெர்லின் : ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் 20 மாதங்களாக சிக்கித் தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையை, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த பவேஷ், ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகள் அரிஹாவுடன் வசித்து வந்தார். கடந்த 2021 ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஜெர்மனியின் குழந்தை நல அதிகாரிகள் குழந்தையை தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டார்.
குழந்தையை நேரடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பான இந்திய நல சேவையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பவேஷ் மற்றும் தாரா தம்பதி பெர்லினின் பாங்கோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்ததுடன், ஜெர்மன் இளைஞர் சேவையான ஜூஜென்டாமிடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் பெற்றோருக்கு இனி இல்லை எனக்கூறியதுடன், குழந்தைக்கு 2021 ஏப் மாதம் தலை மற்றும் முதுகு பகுதியில் குளித்த போது காயம் ஏற்பட்டதையும், சுட்டிக்காட்டியதுடன், குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை தவிர்க்க பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்பட வேண்டும்.
தாய் அல்லது தந்தை வேண்டும் என்றே குழந்தையின் பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். பெற்றோர்களால் கேள்விக்குரிய நிகழ்வுகளை போதுமான அளவு சீரான முறையில் விளக்க முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் 60 நிமிடங்களுக்கு குழந்தையுடன் ஒரு மாதத்தில் இரண்டு முறை பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களும் 90 நிமிடங்கள் தங்கள் மகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement