சென்னையில் ஜூன் 19 முதல் 21-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் ஜூன் 19 முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”Third Sustainable Finance Working Group (SFWG) கூட்டம் 19-6-2023 முதல் 21-6-2023 ஆகிய முன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த Third Sustainable Finance Working Group (SFWG) meeting மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர;.

எனவே, 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் சென்னை பெருநகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.