ஓட்டுக்குப் பணம்: மாணவர்களிடம் விஜய் பேசிய ‘அரசியல்’!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இன்று நடந்த கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய ‘அரசியல்’ பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்திருக்கிறார்.
மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.
கல்வி தொடர்பாகவும் மட்டுமல்லாது, பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதற்கு எதிராகவும் பேசி அரசியல் உள்ளிட்ட பல தளங்களைத் தொட்டுச் சென்றார்.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலான விஜயின் பேச்சை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
கிசுகிசு: கைது விவகாரம் – சீனியர் அமைச்சர் கப்சிப் ஏன்?
“ஷாக் அமைச்சர் கைது விவகாரத்தில் மொத்த அமைச்சர்களும் மீடியாக்களில் பொங்கிய நிலையில், சீனியர் அமைச்சர் வீட்டிலேயே தங்கிவிட்டாராம்.
சீனியர் அமைச்சர் கப்சிப் ஆனதன் பின்னணி காரணம் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் கிசுகிசு பகுதியில்…
மேலும்,
* இலைக் கட்சியின் மாஜிக்களின் திகிலுக்கு காரணம்
* ஆளும் அரசின்டெல்லி பிரதிநிதி பதவியைக் கைப்பற்ற நடந்த போட்டி…
என கிறுகிறுக்க வைக்கும் தகவல்கள்…
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
———–
முதல்வருக்கு பதில் என அதிமுக-வைச் சாடினாரா அண்ணாமலை?!
கசிந்த ‘கோவின்’ தரவுகள்… மக்களுக்கு என்ன பாதிப்பு ?
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் தனிப்பட்ட தரவுகள் ‘கோவின்’ வலைதளத்திலிருந்து வெளியே கசிந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பலரின் ஆதார் விவரங்கள் வெளியே கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது நடந்திருப்பது இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கசிவு என்கிறார்கள்.
மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மத்திய பா.ஜ.க அரசு தவறிவிட்டதா..?
இதனால் மக்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?
படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
WTC Finals: ‘இடம் கிடைத்திருந்தால்..!’ – அஷ்வின் ஓபன் டாக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்தப் போட்டியில் அஷ்வினைத் தேர்ந்தெடுக்காதது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது அஷ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம் பெறாதது குறித்துப் பேசியிருக்கிறார்.
—–
TNPL 2023: அஜிதேஷ் சதம்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்!
ஷாப்பிங்: ஆன்லைன் Vs ஆஃப்லைன்… எது லாபம்?
இன்றைக்குப் பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதுடன், வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும் வாங்குகிறார்கள்.
ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கும் மளிகைக் கடைகளில் நேரில் சென்று பொருள்களை வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்..?
எது லாபம்..?
சினிமா விமர்சனம்: ‘பொம்மை’
பால்ய வயதில் காணாமல் போன தோழி, மீண்டும் பொம்மையாக, காதலியாக நாயகன் வாழ்வில் வருகிறாள். அதன் பிறகு அவன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை!
பொம்மையைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் இஷ்டத்துக்கு நடித்துத் தள்ளியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் கதாபாத்திரத்தின் அழுத்தமான உணர்வினை மட்டும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பொம்மையாக நடித்துள்ள பிரியா பவானிசங்கரிடமும் அதே குறைதான் வெளிப்படுகிறது.
விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
———-
சினிமா விமர்சனம்: ‘ஆதிபுருஷ்
சுமாரான நடிப்பு, படு சுமாரான கிராபிக்ஸ்; பழைய ராமாயணப் படைப்புகளே தரமாக இருக்குமே!
விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
பாலியல் உறவு வயது: ஜப்பான் அரசு புதிய சட்ட திருத்தம்!
பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கும் நோக்கில் ஜப்பான் அரசு புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
அந்நாட்டில், முந்தைய சட்டம் ஒப்புதல் இல்லாத உடலுறவுக்கு வழிவகுத்தது, ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா, ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.