சென்னை: அதிக மார்க் எடுத்த என்னை கூப்பிடவில்லை என்று மாணவி ஒருவர் கதறி அழுதார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் சந்திப்பு: பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதுமே நடிகர் விஜய் மக்கள் இயக்கம் விஜய் மாணவர்களை சந்திப்பார் என்று அறிவித்திருந்தார். இது விஜய்யின் அரசியல் வருகைக்கான அடித்தளமாக பார்க்கப்பட்டது. இதனால்,
விஜய் பேச்சு: சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய விஜய், முடிந்தவரை நன்றாக படியுங்கள், அனைத்து தலைவர்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், தேவை இல்லாத விஷயங்களை விட்டு விடுங்கள் என்றார்.
மாணவர்களுக்கு அட்வைஸ்: மேலும், உன் நண்பரைப் பற்றிச் சொல்லு, உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்று நிறையப் பேர் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனக்குத் தெரிந்து இன்று இதெல்லாம் மாறிவிட்டது. நீ எந்த சோஷியல் மீடியா பக்கத்தை ஃபாலோ செய்கிறாய் என்று சொல்லு, நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதுதான் இன்றைய பழமொழியாக மாறி இருக்கிறது. மாணவர்களாகி உங்களை திசை திருப்ப ஒரு கூட்டமே இருக்கிறது என்று மாணவர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை கூறினார்.
கதறி அழுத மாணவி: இவ்வாறு ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது தனது தொகுதியில் 597 மதிப்பெண் பெற்ற மாணவி நான் தான் எனது தொகுதியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி நான் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தேன். ஆனால் என்னை விழாவிற்கு கூப்பிடவில்லை. விழாவில் கலந்து கொண்டு இருக்கும் மாணவி பிரெஞ்சை எடுத்து படித்த மாணவி என்று கதறி அழுதபடி பேசினார்.
ஆறுதல்: இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் பள்ளியில் லிஸ்ட் கேட்டுத்தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது என்றும், இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டு இருப்பதால் எதுவும் எங்களால் செய்ய முடியாது இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு வருமாறு ஆறுதல் கூறி அந்த மாணவியை அனுப்பி வைத்தனர். விஜய்யை பார்க்க முடியாத விரக்தியில் அந்த மாணவி அங்கிருந்து அழுதபடியே சென்றார்.