வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நேர்மறையான சமூக வலைதளமாக டுவிட்டரை மாற்றியுள்ளேன் என அதன் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து அதன் நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் சென்றிருந்த எலான் மஸ்க் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியது, இதுவரை இல்லாத அளவிற்கு டுவிட்டரின் பயன்பாடு மக்களை சென்றடைந்துள்ளது. டுவிட்டர் சமூக வலைதளம் இதற்கு முன்பு சிவில் சமூகத்தின் மீது தீங்கை விளைவிப்பதாக இருந்தது. அதனை மாற்றி, மனித குலத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாக மாற்றியுள்ளேன்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோவின் திறமை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது. விலகிச் சென்ற விளம்பரதாரர்கள் பெருமளவில் மீண்டும் திரும்ப வந்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement