விஜய் அரசியல் பேச்சு.. ரஜினியை வம்பிழுத்த கரு. பழனியப்பன்.. குசும்புதானே இது!

சென்னை:
விஜய்யின் அரசியல் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய சினிமா இயக்குநர் கரு. பழனியப்பன், ரஜினியை வம்புக்கு இழுக்கும் விதமாக கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் சமீபகால நகர்வுகள், அவர் அரசியலுக்கு வர ஆயத்தமாவதை காட்டுவதை தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தி இருந்தார். இதேபோல், உலக பட்டினி தினத்தன்று 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஒருவேளை மதிய உணவு விஜய் மக்கள் இயக்த்தினரால் வழங்கப்பட்டது.

இவை யாவும் தனது அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாகவே விஜய் செய்து வருவது அப்பட்டமாக தெரிகிறது. அந்த வகையில், இன்று 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை விஜய் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், “அம்பேத்கர்,

, காமராஜரை படியுங்கள்” என பேசியது வைரலானது. மேலும், அவர் முன்னெடுக்கப் போகும் அரசியல் சித்தாந்தத்தையும் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது. ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்றார்.. அதை படித்தாலே மக்கள் சரியாக வாக்களித்து விடுவார்கள்.. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.