சென்னை : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் முதல் மரியாதை ராதா போல ஜாக்கெட் போடாமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக் டாக் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமான கேப்ரில்லா, இன்று அடைந்திருக்கும் உயரம் மிக மிக பெரியது எனலாம்.
ஆனால் இந்த உயரத்தை தொட அவர் சந்தித்த கஷ்டங்களும், அவமானங்களும் ஏராளமானவை. அந்த வலிகளை தாண்டி இன்று சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நடிகை கேப்ரியல்லா செல்லஸ்: நிறத்திற்கும் திறமைக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்தவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ். பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும், அழகுக்கு ஒரு குறையும் இல்லாதவர். அவரது முகத்தில் ஏதோ ஒரு கலை இருக்கு என்று சொல்லாம்.
சின்னத்திரையில்: நடிகை கேப்ரில்லா, 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி போல் சிரித்து காட்டி பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்பு டிக் டாக்கில் வீடியோ போட்டு பெயர் எடுத்தார். தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேசி, யாருக்கும் பயப்படாமல் துணிந்து டிக் டாக்கில் பேசி இருந்தார்.
சுந்தரி சீரியல்: சின்னத்திரையில் அவ்வப்போது நடித்து வந்த கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ஐரா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி திரைப்படத்திலும், காஞ்சனா 3, சேதும் ஆயிரம் பொன் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அட நீங்கக்கூட இப்படியா? சீரியல்களுக்கான சூட்டிங், சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் என எப்போதும் பிஸியாகவே இருக்கு கேப்ரில்லா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கெட் அணியாமல் முதல் மரியாதை ராதா போல மொட்டை மாடியில் இருந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட நீங்கக்கூட இப்படியா? என கருத்துக்க பகிர்ந்து வருகின்றனர்.