சண்டையை ஆரம்பித்தவர் அவர் தான்… நறுக் என சொன்ன நவீன் உல்-ஹக்!

Virat Kohli – Naveen Ul Haq Clash: நடந்த முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனின்போது, இந்திய பேட்டர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே களத்தில் சண்டை ஏற்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) ஆகியவற்றின் போது இந்த சண்டை நடந்தது. விராட் கோலியுடன், நவீன் மட்டுமின்றி கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மைதானத்தில் ஏற்பட்ட இந்த சண்டைக்குப் பிறகும், கம்பீர், நவீன் மற்றும் விராட் இடையே பனிப்போர் தொடர்ந்தது, அவர்கள் ஒருவரையொருவர் மறைமுகமாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு வந்தனர். மோதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், இவர்களுக்கு இடையேயான சண்டைக்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் பிபிசி பாஷ்டோவுக்கு அளித்த பேட்டியில், நவீன் ஒரு இதுகுறித்து பேசியது, சிறு விளக்கத்தை அளித்திருக்கிறது எனலாம்.

Virat Kohli fans booing Gautam Gambhir and Naveen ul haq.

Virat Kohli is bigger than Cricket pic.twitter.com/djt7R1BasQ

— Shaurya (@Kohli_Dewotee) May 20, 2023

அந்த போட்டி முடிந்து இரு அணியினரும் கைகுலுக்கலும் சடங்கின் போது சண்டையை ஆரம்பித்தது தான் அல்ல என்று கூறிய நவீன், போட்டியில் யாரையும் ஸ்லெட்ஜ் கூட செய்யவில்லை என்று கூறி சண்டையை தொடங்கியதற்கு கோலி மீது குற்றம் சாட்டினார். “அவர் (கோலி) போட்டியின் போதும் அதற்குப் பிறகும் இதையெல்லாம் சொல்லியிருக்கக் கூடாது. நான் சண்டையைத் தொடங்கவில்லை, போட்டி முடிந்து, நாங்கள் கைகுலுக்கிக்கொண்டிருக்கும்போது, ​​விராட் கோலி சண்டையைத் தொடங்கினார். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் பொதுவாக யாரையும் ஸ்லெட்ஜ் செய்வதில்லை, அதைச் செய்தாலும் நான் பந்துவீசும்போது பந்துவீச்சாளர்களிடம்தான் சொல்வேன். அந்தப் போட்டியில் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்றாார். 

போட்டியின் போது தான் ஒருபோதும் பொறுமையை இழக்கவில்லை என்றும் யாரையும் தவறாக பேசுவதில்லை என்றும் நவீன் கூறினார். மற்றவர்கள் தமக்கு அப்படிச் செய்தபோது அவர் அமைதியாக இருப்பதில்லை என்றும் அவர் கூறினார். “அங்கிருந்த வீரர்களுக்கு, நான் எப்படிச் சூழ்நிலையைச் சமாளித்தேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நான் பேட்டிங் செய்யும் போதோ அல்லது போட்டிக்குப் பிறகும் என் கோபத்தை இழக்கவில்லை. போட்டிக்குப் பிறகு நான் செய்ததை அனைவரும் பார்க்கலாம். நான் கைகுலுக்கிக்கொண்டிருந்தேன். (கோலி) என் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்தார், நானும் ஒரு மனிதன் தான், நான் எதிர்வினையாற்றினேன்.

அபராதத்தை நீங்கள் பார்க்கும்போது, ​​சண்டையை ஆரம்பித்தது யார் என்று உங்களுக்குப் புரியும். யாராவது என்னிடம் ஏதாவது சொன்னால் நான் பின்வாங்க மாட்டேன். நான் ஆப்கானிஸ்தானுக்காக U-16 விளையாடத் தொடங்கியதில் இருந்து எனக்கு அது உண்டு. நான் யாரையும் மோசமாகப் பேசுவதில்லை. யாராவது என்னிடம் அப்படிச் செய்தால் நான் அமைதியாக இருக்க மாட்டேன், நான் அதைத் திருப்பித் தருகிறேன், நீங்கள் அதை தவறாக நினைக்கலாம், ஆனால் அது எப்படி இருக்கிறது, “என்று அவர் கூறினார்.

கிளப் மட்டத்திலோ அல்லது சர்வதேச போட்டியிலோ, ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் அதே தீவிரத்துடன் தான் விளையாடுவேன் என்று நவீன் மேலும் கூறினார். “அது எதிரணியைச் சேர்ந்த இளம் வீரராக இருந்தாலும் சரி, மூத்த அணி வீரராக இருந்தாலும் சரி, கிளப் போட்டியிலோ, ஆப்கானிஸ்தானுக்காக விளையாடும் போட்டியிலோ அல்லது ஐபிஎல் போட்டியிலோ, கிரிக்கெட் போட்டியை அதே தீவிரத்துடன் விளையாடுவேன், யாராவது ஏதாவது சொன்னால் நான் பின்வாங்குவேன்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.