ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் வர லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த தகவல்கள் தான் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. இந்த தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தப்படம் குறித்து தினமும் பல அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவின் தற்போதைய சென்ஷேசனல் இயக்குனர் என லொகெஹ் கனகராஜை கூறலாம். இவரது இயக்கத்தில் நடிக்க பிற மொழிகளை சார்ந்த பிரபல நடிகர்களே ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜும் தன்னுடைய இயக்கத்தில் விக்ரம் 2, கைதி 2 என பல லைன் அப்களை வைத்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தை தொடர்ந்து தான் லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் ரஜினியின் 171 படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப்படத்தை தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ‘தலைவர் 171’ படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படம் தன்னுடைய கடைசி படமாக இருப்பதால் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்க வேண்டும் என ரஜினி விருப்புவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக கேஜிஎப் ஹீரோ யாஷிடம் லோகேஷ் கனகராஜை பேசி சொல்லியுள்ளராம் ரஜினி.
Vijay: இத எப்ப சொல்ல போறீங்க.. விஜய்யை வம்பிழுத்த ப்ளூ சட்டை: கொந்தளித்த ரசிகர்கள்.!
இந்த தகவலை வலைப்பேச்சு வீடியோவில் பேசியதை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடித்தனர். சூர்யாவும் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதனால் இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதே போல் ‘தலைவர் 171’ படத்திலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது தனது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்தப்படங்களை தொடர்ந்து ரஜினி, ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்முன்னு ஆரம்பித்த ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்தக்கட்ட பணிகள்: ஆரம்பமே அமர்களமா இருக்கே.!