ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: கார்கில் போரின் போதும், பாலகோட்டில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்த போதும் உறுதியையும், திறனையும் இந்திய விமானப்படை அளித்தது.
மனிதாபிமான உதவிகளையும், பேரிடர் நிவாரணப் பணிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டு வருகிறது.
எதிர்கால போர்க்களத்தில் உயர் தொழில்நுட்பப் போரை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நமது விமானப்படை எப்போதும் தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement