திருச்சி, லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் அதிக அளவில் டாஸ்மாக் மது குடித்ததால் இருவர் உயிரிழந்த உள்ளதாக, திருச்சி எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
தச்சங்குறிச்சியில் இயங்கிவரும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி குடித்த முனியாண்டி, சிவக்குமார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது குடித்த பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிவக்குமார் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி உயிரிழந்தார். இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கும்பகோணம், மயிலாடுதுறையில் சாய்நாடு கலந்த டாஸ்மாக் மதுவை குடித்த 4 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்த நிலையில், தற்போது தச்சங்குறிச்சியில் இருவர் பலியானது அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், உணவே உண்ணாமல் அதிகம் மது குடித்ததால், இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை முதல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக எஸ்.பி சுஜித் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இருவரின் பிரேத பரிசோதனையில் விஷம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக எஸ் பி தகவல் தெரிவித்துள்ளார்.