குருகிராம்:மின் திருட்டு குறித்து ஆய்வு செய்யச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தரம்பூர் கிராமத்தில் அதிகளவில் மின் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ‘தட்சின ஹரியானா பிஜிலி வித்ரன் நிகம் லிமிடெட்’ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரம்பூர் கிராமத்தில் ஆய்வு செய்ய 14ம் தேதி சென்றனர். அப்போது, சர்மா கிஷோர் என்ற அதிகாரி தலைமையில் சென்ற குழு மீது, கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், அவர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து, டி.எச்.சி.வி.என்., மண்டல அதிகாரி விக்ரம் சிங் பர்மர், போலீசில் புகார் செய்தார். ராஜேந்திரா பார்க் போலீசார் விசாரணை நடத்தி, கிராம மக்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை துவக்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement