மாஸ்கோ,
உக்ரைனின் சொந்த ஆயுதங்கள் விரைவில் தீர்ந்து போகும் என ரஷ்ய அதிபர் புதின் கணித்துள்ளார். மேற்கு நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கிய உக்ரைன் அதில் முன்னேறத் தவறி விட்டதாக புதின் தெரிவித்தார்.
அணு ஆயுதத்தை ஏற்கெனவே பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்திவிட்டதாக கூறிய புதின், அவற்றை பயன்படுத்துவதற்கான தேவை எழவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
ரஷியாவின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் கோட்பாட்டு அளவில் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் எனவும், அதற்கான தேவை தற்போது இல்லை அனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.