சென்னை: ஆண்டுதோறும் ஜூன் 19ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சிக்கல்களை தாண்டி இந்த தினம் அங்கீகாரம் பெற்றது.
கடந்த 1910ம் ஆண்டுமுதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் இந்த தினத்தை உருவாக்கினார்.
இந்த தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த தினத்தை கொண்டாடும் வகையில் கலர்ஸ் தமிழ் சேனல் கலக்கலான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.
தந்தையர் தினக் கொண்டாட்டத்தில் கலர்ஸ் தமிழ் சேனல்: ஆண்டுதோறும் ஜூன் 19ம் தேதி ததையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1910ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் இந்த தினத்தை உருவாக்கினார். அமெரிக்காவை சேர்ந்த சொனாரா என்ற அந்தப் பெண்ணின் தாய் 6 குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்த நிலையில், அவர்கள் 6 பேரையும் அவரது தந்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார். இதையடுத்தே அவருக்கு தந்தையர் தினத்தை கொண்டாடும் முடிவு தோன்றியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரம் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் இந்த தேதி மாறுபடுகிறது. சர்வதேச அளவில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலும் தந்தையர் தின வாரயிறுதியை மகிழ்ச்சிகரமாக மாற்ற பெற்றோருடன் இணைந்து இந்த நாளை கொண்டாடும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான 4 படங்களை அடுத்தடுத்து ஒளிபரப்ப உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் திக்குவாய் இளைஞராக சந்தானம் நடித்திருந்த சபாபதி படத்தை ஒளிபரப்ப உள்ளது. ஆர் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சபாபதிக்கும் அவரது கண்டிப்பான தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளையும் மற்றும் அவருக்கு கிடைக்கும் ஒரு பெட்டி அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக பிற்பகல் 3.30 மணிக்கு 60 வயது மாநிறம் என்ற படம் ஒளிபரப்பாக உள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். அப்பா -மகன் இடையிலான மென்மையான உறவை பேசும் உணர்வுப்பூர்வமான படமாக இந்தப் படம் உருவாகியிருந்தது.
அடுத்ததாக கலர்ஸ் தமிழில் மாலை 6.30 மணிக்கு அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஒளிபரப்பாக உள்ளது. காலமும் சூழலும் மனிதர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை மையமாக கொண்டு உணர்வுப்பூர்வமாக இந்தப் படத்தை அணுகியிருந்தார் இயக்குநர். இந்தப் படத்தில் மகன் மீது அளவற்ற பாசம் காட்டும் தந்தையாக நாசர் நடித்திருந்தார். மகனாக அசோக் செல்வன் நடித்திருந்தார். ஒரு விபத்து, அதை தொடர்ந்த உயிரிழப்பு ஏற்படுத்தும் வாழ்க்கை மாற்றங்கள் இந்தப் படத்தில் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தன.
அடுத்ததாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது காலேஜ் குமார் படம். ஹரி சந்தோஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் மகன்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காணும் தந்தைக்கும் அவரது கனவை அசட்டை செய்யும் மகன்களுக்கும் இடையிலான உணர்வு போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் பாசமிகு தந்தையாக பிரபு நடித்திருந்தார். ஒருகட்டத்தில் அவரே கல்லூரிக்கு சென்று படிப்பதாக கதை நகர்வு காணப்படுகிறது.
அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், சீரியல்கள் என மாஸ் காட்டிவரும் கலர்ஸ் தமிழ் சேனல், தற்போது அடுத்தடுத்த சிறப்பான படங்களை, தந்தை -மகன் உறவை சிறப்பாக காட்டும் படங்களை தந்தையர் தினக் கொண்டாட்டமாக தரவுள்ளது. இந்தப் படங்களை குடும்பத்தினருடன் இணைந்து பார்த்து மகிழலாம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினத்தில் இந்தப் படங்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில், சூப்பரான லஞ்சை முடித்துவிட்டு, அடுத்தடுத்து இந்தப் படங்களை பார்க்கும் வகையில் நேரமும் அமைந்துள்ளது.