இந்தியாவில் 108 பேருக்கு கொரோனா- தொடர்ந்து 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 100-க்குள் (96) அடங்கியது. நேற்று மீண்டும் 100-க் கடந்தது. 108 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 142 பேர் குணம் அடைந்தனர். இதன்மூலம் இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று மேலும் 34 குறைந்தது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,983 ஆகக் குறைந்தது.

தொற்று பாதிப்பினால் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக உயிரிழப்பு ஏதும் இல்லை. எனவே தொற்றால் மரணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 893 ஆக தொடருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.