புதுடில்லி:மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமின் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைநகர் டில்லியில், 300 பேரை ஏமாற்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக சத்வீர் சிங் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் சத்வீர் சிங் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுன் விடுமுறை கால நீதிபதி அபர்ணா சுவாமி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்த மோசடியில் ஏற்கனவே ஒருவரை கைது செய்துள்ளதாகவும், பலமுறை சம்மன் அனுப்பியும் சிங் ஆஜராகவில்லை. எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சத்வீர் சிங்கின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அபர்ணா சுவாமி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement