ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவிக்க முடிவு செய்தார் தளபதி விஜய். இதையடுத்து தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் இருக்கும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.
“பெரியாரை பற்றி படியுங்கள்” நடிகர் விஜய் அட்வைஸ்!
அந்த நிகழ்ச்சியில் சுமார் 1,600 மாணவ, மாணவியர் தங்களின் பெற்றோருடன் கலந்து கொண்டார்கள். மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஊக்கத்தொகை, சான்றிதழ், பொன்னாடை அளித்து கவுரவப்படுத்தினார் விஜய்.
12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்தார். காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 11.20 மணி வரை நடந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சுமார் 12 மணிநேரம் மேடையில் கால் வலிக்க நின்று கொண்டிருந்தாலும் முகத்தில் அந்த ஸ்மைல் போகவில்லை விஜய்க்கு. அவரை பார்த்தாலே சோர்வாக இருப்பது தெரிந்தாலும் மாணவ, மாணவியருடன் சேர்ந்து ஃபன் பண்ணி சிரித்துக் கொண்டே இருந்தார்.
சில மாணவ, மாணவியர் விஜய்க்காக கவிதை எல்லாம் எழுதிக் கொண்டு வந்தார்கள்.
விஜய்யின் தோற்றம் தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. ஹேர்ஸ்டைலை மாற்றி, ஒரு ஜீன்ஸ், சட்டையில் வந்திருந்தார். விஜய்யை பார்த்த அனைவரும் இவருக்கு மட்டும் வயது ஏறவே செய்யாதா என வியந்து பேசினார்கள்.
நேற்றைய நிகழ்ச்சிக்காக மட்டும் விஜய் ரூ. 2 கோடி செலவு செய்திருக்கிறார். மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோர் நல்லபடியாக வந்துவிட்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அடுத்த தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என விஜய் கேட்டுக் கொண்டார். அவர் அரசியலுக்கு வரப் போவதாக பேசப்படும் நிலையில் இப்படி பேசியிருக்கிறார்.
மாற்றுத்திறனாளி மாணவன் அருகில் அமர்ந்து பேசினார் விஜய். அந்த மாணவர் விஜய்க்கு பரிசு கொடுத்தார். விஜய்யுடன் நேரம் செலவிட முடிந்ததை நினைத்து மாணவன் கண் கலங்கினார். அதை பார்த்து விஜய்யாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கவுரவித்து அனுப்பினோமா என்று இல்லாமல் அனைவருடனும் பொறுமையாக பேசினார் விஜய்.
தான் அதிக மார்க் எடுத்தும் தன்னை அழைக்கவில்லை என்றும், நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி மாணவி ஒருவர் அழுத வீடியோ வைரலானது. அந்த மாணவி குறித்து அறிந்ததும் உடனே அவரை அழைத்து கவுரவித்தார் விஜய்.
SJ Suryah: 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்கும் எஸ்.ஜே. சூர்யா: நடிப்பு ராட்சசன் தான் ஹீரோ
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோரோ விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று கோஷமிட்டார்கள்.
விஜய் நடத்திய இந்த 12 மணிநேர நிகழ்ச்சி பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் விஜய் தான் ஹாட் டாபிக். விஜய்ணா விரைவில் அரசியலுக்கு வர வேண்டும், முதல்வர் ஆகி தமிழக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.